search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்மிரிதி இரானி"

    உத்தரபிரதேசம் மாநிலத்தின் அமேதி தொகுதியில் பாஜக வேட்பாளர் ஸ்மிரிதி இரானி அபார வெற்றி பெற்றார். தனது வெற்றி குறித்து ஸ்மிரிதி என்ன சொல்கிறார் என பார்ப்போம்.
    அமேதி:

    பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசம் மாநிலத்தின் அமேதி தொகுதியில்  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து பாஜக வேட்பாளராக ஸ்மிரிதி இரானி களமிறங்கினார். தேர்தல் 7 கட்டங்களாக முடிவடைந்த நிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கை நடந்தது.வாக்கு எண்ணிக்கை துவக்கம் முதலே ராகுல் காந்தி, ஸ்மிரிதி ஆகிய இருவருக்குமிடையே கடுமையான போட்டி நிலவியது.

    இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுலை விட 55,120 வாக்குகள் அதிகம் பெற்று ஸ்மிரிதி இரானி வெற்றி பெற்றார். இவர் பெற்ற மொத்த வாக்குகள் 4,67,598 ஆகும்.  தனது வெற்றி குறித்து ஸ்மிரிதி இரானி கூறியதாவது:



    அமேதிக்கு இன்று புதிய விடியல். இந்த வெற்றி புதிய உறுதியை அளிக்கிறது. அமேதி மக்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அமேதியை நான் மிகவும் மதிக்கிறேன். உங்கள் நம்பிக்கையை வாக்குகளாக செலுத்தியுள்ளீர்கள். தாமரையை அமேதியில் மலர வைத்துள்ளீர்கள். அமேதி தொகுதிக்கு பணியாற்ற என்றும் கடமைப்பட்டிருக்கிறேன்.

    நாம் அனைவரும் ஒரே குடும்பத்தை போன்று செயல்பட்டோம். தொண்டர்களின் மிகச்சிறப்பான பணிகளால் வென்றுள்ளோம். கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட பகுதிகளில் உயிரிழந்த பாஜக தொண்டர்களின் குடும்பங்களுக்கு இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
     

     
    உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரப்பொது கூட்டத்தில் கலந்துக் கொண்டு பேசிய மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் கங்கையை தரிசிக்க ராகுல் காந்தி வருவார் என தாக்கி பேசியுள்ளார்.
    வாரணாசி:

    உத்தரபிரதேசம் மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 11ம் தேதி தொடங்கிய பாராளுமன்ற தேர்தல் 5 கட்டங்கள் முடிவடைந்த நிலையில், வரும் 12, 19 ஆகிய தேதிகளில் மீதமுள்ள தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதையடுத்து காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அந்த வகையில் மத்திய மந்திரியும், உத்தரபிரதேசத்தில் அமேதி தொகுதியில் ராகுலை எதிர்த்து போட்டியிடும் பாஜக வேட்பாளருமான ஸ்மிரிதி இரானி நேற்று நடந்த பிரசாரப்பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:



    நாட்டிற்காக பிரதமர் மோடி உழைத்து வருகிறார். ஆனால் கபடதாரிகளான காங்கிரஸ் கட்சியினர்  மற்றும் மகா கூட்டணியைச் சேர்ந்தவர்கள் பிரதமரை குறை கூறுவதை தவிர வேரு எதையும் செய்வதில்லை. ஆண்டு தோறும் வெளிநாடுகளுக்கு சென்று வரும் ராகுல் காந்திக்கு இந்தியாவின் கங்கை,  5 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதாவது தேர்தலின்போது மட்டும் தான் தெரியும்.  அப்போது தான் வருகை தந்து தரிசனம் செய்வார்.  

    மேலும் காங்கிரஸ் கட்சியினர் அயோத்தியாவிற்கு வருவார்கள். ஆனால், ராமர் ஆலயங்களுக்கு சென்று ராமரை வணங்கமாட்டார்கள். ஓட்டு தான் அவர்களுக்கு முக்கியம். மக்களை ஓட்டு வங்கிகளாக தான் பயன்படுத்துகிறார்கள். வாரணாசி தொகுதியில் களத்தில் இறங்கி நேரடியாக போட்டியிட முடியவில்லை. மேலும் ராகுல் காந்தி,  அமேதியையும் விடுத்து வயநாட்டிற்கு சென்று விட்டார்.

     இவ்வாறு அவர் பேசினார்.  
    உத்தரபிரதேசத்தின் அமேதி தொகுதியில் மெகா உணவு பூங்கா அமைப்பதற்கு பாஜக பல்வேறு தடைகளை ஏற்படுத்துவதாக ராகுல் கூறியதற்கு மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி ராகுல் பொய் சொல்வதாக குற்றம் சாட்டியுள்ளார். #RahulGandhi #Smritiirani
    அமேதி :

    உத்தரபிரதேசத்தின் அமேதி தொகுதியில் மெகா உணவு பூங்கா அமைப்பதற்கு பா.ஜனதா பல்வேறு தடைகளை ஏற்படுத்துவதாக அந்த தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி இருந்தார். ஆனால் இது உண்மை இல்லை என அந்த தொகுதியின் பா.ஜனதா வேட்பாளரும், மத்திய மந்திரியுமான ஸ்மிரிதி இரானி கூறியுள்ளார்.

    இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ‘ராகுல் காந்தி கூறும் அந்த உணவு பூங்காவுக்கு கியாஸ் வினியோகம் செய்வதில்லை என முடிவு செய்திருப்பதாக மன்மோகன் சிங் அரசுதான் எழுத்துப்பூர்வமாக கடிதம் கொடுத்து இருந்தது. அது ஏற்கனவே வெளியிடப்பட்டு இருக்கிறது. ஆனால் இந்த விவகாரத்தில் பொய்களை கூறி ராகுல் காந்தி மக்களை தவறாக வழிநடத்துகிறார்’ என்று தெரிவித்தார்.



    விவசாயிகளின் நலன் குறித்து ராகுல் காந்தி பேசிவரும் நிலையில், காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தொழிற்சாலைகளுக்காக விவசாயிகளின் நிலங்கள் பறிக்கப்பட்டதாக குற்றம் சாட்டிய ஸ்மிரிதி இரானி, இந்த நிலங்களை திருப்பிக்கொடுக்குமாறு கோர்ட்டு உத்தரவிட்டு 3 ஆண்டுகள் கடந்த பிறகு கூட இன்னும் அந்த நிலங்கள் திருப்பி வழங்கப்படவில்லை எனவும் கூறினார். #RahulGandhi #Smritiirani
    இரண்டு தொகுதிகளிலும் தோல்வியடைந்த பின்னர், ராகுல் காந்தி அடுத்த தேர்தலில் அண்டை நாட்டில் இருந்து போட்டியிடுவார் என் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
    நாடாளுமன்ற மக்களவைக்கான அமேதி தொகுதி வேட்பாளராக காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். இதனுடன் கேரளாவின் வயநாட்டிலும் அவர் போட்டியிடுகின்றார்.

    இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மந்திரி பியூஷ் கோயல், ‘‘அமேதி தொகுதியில் ஸ்மிரிதி இரானி ராகுலை வீழ்த்துவார்.  வயநாட்டிலும் ராகுல் தோல்வியை தழுவுவார். இதனால் அடுத்த தேர்தலில் போட்டியிட அண்டை நாடுகளில் தொகுதியை தேடுவார்’’ என கூறியுள்ளார்.



    ‘‘ஸ்மிரிதி இரானியால் தோற்கடிக்கப்படுவோம் என்ற அச்சத்திலேயே வயநாட்டில் அவர் போட்டியிடுகிறார். வயநாட்டில் இடது சாரிகளுக்கு எதிராக போட்டியிடும் அவர், அக்கட்சியினரை விமர்சிக்க போவதில்லை என கூறுகிறார். அவர் அச்சத்துடன் உள்ளார். ஜனநாயகத்தில், தனது எதிர்ப்பாளர்களை எதிர்த்து பேச தைரியம் இல்லாத ஒரு தலைவர் நாட்டுக்கு சேவை செய்ய இயலாது’’ என்றும் கூறியுள்ளார்.

    கேரள வயநாட்டில் இம்மாத தொடக்கத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தபின் பேசிய ராகுல், ‘‘சாரிகளுக்கு எதிராக விமர்சித்து எதனையும் பேசப்போவதில்லை. நான் இங்கு ஒற்றுமைக்கான செய்திளை அளிக்கவே வந்துள்ளேன்’’ என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    உத்தரபிரதேசத்தில் அமேதி தொகுதியில் போட்டியிடும் ஸ்மிரிதி இரானி பட்டப்படிப்பு முடிக்கவில்லை எனவும், சொத்து மதிப்பு ரூ.4.71 கோடி எனவும் வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. #LokSabhaElections2019 #SmritiIrani
    அமேதி:

    பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசம் மாநிலம் அமேதி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் , வேட்பாளருமான ராகுல் காந்தியை எதிர்த்து  பாஜக சார்பில் மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி போட்டியிடுகிறார்.

    இதையடுத்து வேட்பு மனு தாக்கல் செய்ய நேற்று அமேதி தொகுதியை  அடைந்த ஸ்மிரிதி இரானி, உத்தரபிரதேச மாநிலம் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் உடன் ஊர்வலமாக வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

    கடந்த 2014ம் ஆண்டு ஸ்மிர்தி இரானி  வேட்புமனு தாக்கல் செய்தபோது, 1994ம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றதாக குறிப்பிட்டிருந்தார்.   இதனை எதிர்கட்சியினர் தொடர்ந்து மறுத்து வந்தனர்.



    இந்நிலையில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தபோது சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில்  ஸ்மிரிதி இரானி பட்டப்படிப்பை முடிக்கவில்லை எனவும், அவரது சொத்து மதிப்பு ரூ.4.71 கோடி எனவும் கூறப்பட்டுள்ளது.

    இதில் ரூ.1.75 கோடி அசையும் சொத்துக்கள் ஆகும். இரானிக்கு ரூ.13.14 லட்சம் மதிப்புள்ள வாகனங்களும், ரூ.21 லட்சம் மதிப்புள்ள நகைகளும் உள்ளன. ரூ.1.45 கோடி மதிப்புள்ள விவசாய நிலம் மற்றும்  ரூ.1.50 கோடி மதிப்புள்ள தங்கியிருக்கும் வீடுஆகியவற்றுடன் சேர்த்து ரூ.2.96 கோடி அசையா சொத்துக்களும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஸ்மிரிதி இரானியின் கணவர் ஜுபின் இரானியின் சொத்து மதிப்பில் ரூ.1.69கோடி அசையும் சொத்துக்கள் எனவும், ரூ.2.97கோடி அசையா சொத்துக்கள் எனவும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  #LokSabhaElections2019 #SmritiIrani
    உத்தரபிரதேசம் மாநிலத்தின் அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிடும் ஸ்மிரிதி இரானி இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். #LokSabhaElections2019 #SmritiIrani
    அமேதி:

    உத்தரபிரதேசம் மாநிலத்தில் ஏப்ரல் 11ம் தேதி  துவங்கி 7 கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பல்வேறு தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசம் மாநிலம் அமேதி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் , வேட்பாளருமான ராகுல் காந்தியை எதிர்த்து  பாஜக சார்பில் மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி போட்டியிடுகிறார். இதையடுத்து இன்று காலை ஸ்மிரிதி இரானி தேர்தலில் வெற்றி பெற வேண்டி, தனது கணவர் சுபீன் இரானியுடன் இணைந்து பூஜை நடத்தினார்.



    அதன் பின்னர் வேட்பு மனு தாக்கல் செய்ய அமேதி தொகுதியை  அடைந்த ஸ்மிரிதி இரானி, பாஜக தொண்டர்கள், ஆதரவாளர்களுடன் திறந்த வாகனத்தில் ஊர்வலமாக புறப்பட்டார். வாகனத்தில் சென்ற அவருக்கு வழிநெடுக தொண்டர்கள் மலர்கள் தூவி உற்சாகமாக வரவேற்றனர்.  அப்போது ஸ்மிர்தி இரானியுடன் உத்தரபிரதேச மாநிலம் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் உடன் இருந்தார்.

    இந்த ஊர்வலம் தேர்தல் அலுவலகத்தில் நிறைவடைந்ததும் ஸ்மிரிதி இரானி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். #LokSabhaElections2019 #SmritiIrani
    பிரதமர் மோடி அரசியலை விட்டு விலகிவிட்டால் நானும் இந்திய அரசியலில் இருக்க மாட்டேன் என்று மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி கூறினார். #SmritiIrani #PMModi
    புனே:

    மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி புனேவில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது பார்வையாளர்கள் கேட்ட கேள்விக்கு ஸ்மிரிதி இரானி பதில் அளித்து பேசியதாவது:

    நான் அரசியலுக்கு வருவேன் என்றோ, இவ்வளவு பெரிய பணிகளில் ஈடுபடுவேன் என்றோ ஒருபோதும் நினைத்தது இல்லை. புகழ்பெற்ற தலைவர்களுடன் பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருப்பதை அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும்.

    ஏற்கனவே மாபெரும் தலைவர் வாஜ்பாயுடன் பணியாற்றினேன். தற்போது பிரதமர் மோடியுடன் பணியாற்றுகிறேன். பிரதமர் மோடி நீண்ட காலம் அரசியலில் இருப்பார்.



    அவர் அரசியலை விட்டு விலகிவிட்டால் நானும் இந்திய அரசியலில் இருக்க மாட்டேன். நான் எனது வாழ்க்கையை நாட்டுக்காக இந்த சமூகத்துகாக ஒப்படைத்திருக்கிறேன்.

    அமேதி தொகுதியில் கடந்த முறை நான் போட்டியிட்டபோது யார் இந்த ஸ்மிரிதி இரானி என்று கேட்டார்கள். ஆனால் இப்போது நான் யார் என்பது எல்லோருக்கும் தெரிந்துள்ளது.

    கட்சியும், கட்சித்தலைவர் அமித் ஷாவும் முடிவெடுத்தால் மீண்டும் நான் அமேதி தொகுதியில் போட்டியிடுவேன். பெண்கள் அரசியலில் காலூன்றுவது என்பது கடினமான வி‌ஷயம். மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ், தற்போதைய சபாநாயகர் சுமித்ரா மகாஜன் போன்றவர்கள் எனக்கு உந்துசக்தியாக இருந்தவர்கள். அவர்களின் வழியில் நானும் பயணித்து வருகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார். #SmritiIrani  #PMModi
    நீதியின் நலன் கருதி ராபர்ட் வதேராவின் உதவியாளர் அமலாக்கத்துறையிடம் ஆஜராவதை ராகுல் உறுதி செய்யவேண்டும் என மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி கூறியுள்ளார். #SmritiIrani #Rahul #RobertVadra
    புதுடெல்லி:

    பணமோசடி வழக்கில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவின் உதவியாளரை ஜாமீனில் வெளி வரமுடியாத விதத்தில் கைது செய்ய உத்தரவிடக்கோரி அமலாக்கத்துறை டெல்லி கோர்ட்டில் மனுதாக்கல் செய்து உள்ளது.

    இதுகுறித்து மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி நிருபர்களிடம் கூறும்போது, “ராபர்ட் வதேராவின் தனி உதவியாளர் மனோஜ் அரோராவுக்கு அமலாக்கத்துறை 3 முறை சம்மன் அனுப்பியும் அவர் விசாரணைக்காக நேரில் ஆஜராகவில்லை. எனவே நீதியின் நலன் கருதி ராபர்ட் வதேரா தனது உதவியாளர் மனோஜ் அரோராவை அமலாக்கத்துறையின் விசாரணைக்கு ஆஜராகும்படி கூறவேண்டும். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் இதை உறுதி செய்யவேண்டும்” என்று வலியுறுத்தினார்.



    மேலும் அவர் கூறுகையில், “நாடாளுமன்ற மக்களவையில், ரபேல் விவாதத்தின்போது ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் பதில் அளித்தபோது ராகுல்காந்தி கண் சிமிட்டியது ஒரு பெண் மந்திரியின் உணர்வுகளை காயப்படுத்துவது ஆகும். மேலும் இது சபையின் கண்ணியத்தை அவமதிப்பது போலவும் உள்ளது” என்றார்.
    ×